குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - ரிஷபம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை போக ஸ்தானமான 12 ம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் ராசி ஸ்தானமான ஜென்ம வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். 

ஜென்ம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் குழந்தைகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். 

கலைத்துறையில் மேன்மை ஏற்படும். நினைத்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

குரு ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உருவாகும். மறைமுகமான வருமானங்கள் அதிகரிக்கும். 

அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தெய்வீக பணிகளில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். 

கடன் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

குரு நின்ற பலன்:

ஜென்ம வீட்டில் குரு நிற்பதால் கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். 

மற்றவர்களை நம்பி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். 

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது வீண் விரயங்களை தவிர்க்கும். கிடைக்கும் வாய்ப்பு சிறியதாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளவும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கொடுக்கல், வாங்கல் செயல்களை குறைத்துக் கொள்வது நல்லது. முன்ஜாமீன் செயல்களை தவிர்த்துக் கொள்ளவும். முயற்சிகளில் உண்டாகும் தடைகளின் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். உங்கள் பேச்சுக்கான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நபர்களின் தன்மைகளை அறிந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கூறவும். ஆடம்பர சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில போட்டிகள் இருந்தாலும் மாறுபட்ட அனுபவங்களின் மூலம் வெற்றிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் கவனத்தோடு செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நிலுவையில் இருந்துவந்த வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தோடு செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் மற்றொரு முகத்தை அறிவீர்கள். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. 

பிள்ளைகளின் திருமணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் குறையும்.

மாணவர்கள்:

பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆசிரியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். தொலைத்தொடர்பு துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி மற்றும் சமூகம் தொடர்பான கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்புக்கான தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறைமுகமான இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை வளர்ப்புகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மருத்துவ துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

வியாபாரிகள்:

நீண்ட நாட்களாக தேக்கத்தில் இருந்துவந்த பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உண்மை நிலைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கவும். பங்குதாரர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஜவுளி மற்றும் மருத்துவ பொருட்களின் வியாபாரம் மூலம் லாபம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், ஆர்வமின்மையும் குறையும். அயல்நாட்டு தொடர்பு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் மனதில் புதுவிதமான இலக்குகளும், சுபகாரிய பணிகளில் ஒத்துழைப்பும், வெளியூர் சார்ந்த பயணமும் கைகூடி வரும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து, அடக்கத்தோடு செயல்படுவது மேன்மையை உருவாக்கும்.

வழிபாடு:

வியாழக்கிழமைதோறும் சித்தர்களின் வழிபாடும், ஜீவ சமாதிக்கு சென்று வருவதும் மனதளவில் இருந்துவந்த குழப்பங்களை குறைத்து தெளிவினை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top