குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - மிதுனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை லாப ஸ்தானமான 12 ம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் போக ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். 

போக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக நான்காம் ஸ்தானத்தை பார்ப்பதினால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். 

சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகளும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும்.

குரு ஏழாம் பார்வையாக ஆறாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிராக இருந்தவர்கள் பற்றி புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கால்நடை பணிகளில் ஒரு விதமான ஈர்ப்புகள் ஏற்படும். 

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. 

குரு ஒன்பதாம் பார்வையாக எட்டாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் சிந்தனைகளில் சற்று கவனம் வேண்டும். மனத்திற்கு பிடிக்காத சில விஷயங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். 

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணியில் உயர்வு ஏற்படும். மருத்துவ பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 

குரு நின்ற பலன்:

குரு விரய ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான வளர்ச்சிகள் அதிகரிக்கும். 

சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் நினைத்த பணிகளை முடிப்பதில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு காரியங்களில் எதிர்பார்த்த சில பணிகள் தாமதத்திற்கு பின்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. ஜாமீன் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மன அமைதியை கொடுக்கும். 

மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சிறு சிறு மந்தநிலையும், தேக்கமும் ஏற்படும். வெளியூர் பயணங்களால் கையிருப்புகள் குறையும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்ல மதிப்பை உருவாக்கும். நெருக்கமானவர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். நினைத்த செயல்களை செய்வதில், செயல்களின் தன்மை அறிந்து முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். மனதிற்கு விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த முடக்க நிலையில் சில மாற்றங்கள் உண்டாகும். இறை சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக கடன் வாங்குவதை குறைக்கவும். அலட்சியமின்றி செயல்படுவது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியம் விரைவில் நடைபெறும். 

சில அனுபவத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிப்பது பல சிக்கல்களை தவிர்க்கும். எதிர்பாலின மக்களுடன் பழக்கவழக்கத்தை குறைத்து கொள்ளவும்.

மாணவர்கள்:

மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். நண்பர்களின் தன்மை அறிந்து நட்புகளை தேர்ந்தெடுக்கவும். 

விளையாட்டு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சிலருக்கு கைகூடிவரும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வெளிநாடு சென்று பணி புரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். சக பணியாளர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உயர்வை உருவாக்கும். கூட்டாளிகள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலைகள் மாறும். 

புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையோடு செயல்படவும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்கள் எதிர்காலம் சார்ந்து தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். புதுமையான படைப்புகளுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். அரசு வழியில் மதிப்புகள் உயரும். சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பயணங்களால் அனுகூலங்களும், எதிர்பார்த்த சில உதவிகளும், பல நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் ஏற்படும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதையும், அதிக உரிமை கொள்வதையும் குறைத்துக் கொள்வது நல்லது.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமைகளில், வராகியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கிவர காரிய அனுகூலமும், வெற்றியும் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top