புதனின் ஆதிக்கத்தில் பிறந்த கன்னிராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள்,
பார்வை,
சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்போது நெருக்கடிகள், அலைச்சல்
நீங்கும். உங்கள் நீண்டகால ஆசைகள்,
கனவுகள் நிறைவேறும். கடந்தகால அனுபவங்கள்
உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். உங்கள் யோகாதிபதியாகிய சனி சொந்தவீட்டில்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத வளர்ச்சி,
யோகத்தை தருவார். வசதி குறைவான வாடகை வீட்டில்
வசிப்பவர்கள் நல்ல வசதியான பிளாட்டிற்கு இடம் மாறுவீர்கள். தாய், தாய் மாமன், தாய்வழி
உறவுகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குருவின் திருவோண
நட்சத்திர சஞ்சாரம் காரணமாக சுப விசேஷங்கள் தொடரும். கர்ப்பமாக இருக்கும் மகளுக்கு
சுகப்பிரசவம் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியும்,
மன நிறையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்து
சம்பந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. இரண்டு தரப்பிலும் விட்டுக் கொடுத்து
முடித்துக் கொள்வது உத்தமம். ராகு 9ல்
இருப்பதால் நிறைகுறைகள் இருக்கும்.
விற்க முடியாமல்
இருந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். கண்புரைக்கு சிகிச்சை அல்லது அறுவை
சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து வெளி
மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள். பணப்
பற்றாக்குறை காரணமாக பாதியில் நின்ற கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.
வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊரில் போய் நிரந்தரமாகத் தங்குவதற்கான
முடிவுகளை எடுப்பீர்கள்
பெண்கள்:
சனி யோக அம்சத்துடன்
சஞ்சரிப்பதால் தாய்வீட்டில் இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். சுப சௌபாக்கிய
யோகம் உண்டாகும். பிறந்த வீட்டில் இருந்து வரவேண்டிய நகை, பணம் கைக்கு
வரும். மகள் திருமண விஷயமாக நீங்கள் எதிர்பாராத வகையில் எல்லா விஷயங்களும்
மளமளவென்று கூடிவரும். தூரத்து சொந்தத்திலேயே மணமகன் அமைவார். கேதுவின் அருளால்
தடைப்பட்டு வந்த குலதெய்வ நேர்த்திக் கடன்களை மன நிறைவுடன் செய்து முடிப்பீர்கள்.
மத்திய அரசில் பணிபுரிபவர்களுக்கு திடீர் வெளிமாநில இட மாற்றம் இருக்கும். சனியின்
பார்வை காரணமாக மன அழுத்தங்கள் தரக்கூடிய விஷயங்கள் உண்டாகும். கன்னிப் பெண்கள்
பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது நலம் தரும்.
உத்யோகஸ்தர்கள்:
பாக்கிய ஸ்தான ராகு
சில சங்கடங்கள், செலவுகள்
நெருக்கடிகளை தருவார். அதே நேரத்தில் உத்யோக வகையில் சம்பள உயர்வு. விரும்பிய
இடமாற்றம் கிடைக்கும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலத்தில்
நல்ல வேலை கிடைக்கும். பத்திரிகை துறையில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான நிலை
இருக்கும். போட்டோ கிராபர்கள், நிருபர்களுக்கு
சலுகைகள் கிடைக்கும். சனியின் பார்வை காரணமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை கைக்கு
வரும். பகுதிநேர வேலைக்கு முயற்சித் தவர்களுக்கு நல்ல
சம்பளத்தில் நிரந்தர வேலை அமையும். சித்திரை மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு
பதவி உயர்வு வரும் யோகம் உள்ளது.
அரசியல் -
கலைத்துறை:
குரு, சனி
உங்களுக்கு பதவி யோகத்தை தருவார்கள். மாவட்ட அளவில் முக்கிய பதவி கிடைக்கும்.
தொகுதியில் உங்கள் செல்வாக்கு உயரும். M.P,
மந்திரிகளின் தொடர்பு காரணமாக வாரியம், கமிட்டி போன்ற
வற்றில் பதவி கிடைக்கும். கோஷ்டிப் பிரச்னைகளை கடந்து வெற்றி நடை போடுவீர்கள்.
இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு சாதகமான காற்று வீசும். விளம்பர படங்களில்
நடிப்பதற்காக தேர்வு செய்யப்படுவீர்கள். கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு வானொலி, தொலைக்காட்சியில்
இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். நகைச்சுவை கலைஞர்கள் நல்ல புகழ் அடைவார்கள்.
மூத்த கலைஞர்களின் சிபாரிசு, ஆதரவு
கிடைக்கும்.
தொழில் -
வியாபாரம் - விவசாயம்:
சனி, குரு அமைப்பு
காரணமாக சாதகமான நிலை இருக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நல்ல முன்னேற்றம்
அடையும். பேப்பர், அட்டை, ஸ்டேஷனரி, கல்யாண
பத்திரிகை கார்டுகள், விளம்பர
நிறுவனங்கள் மூலம் நல்ல லாபம் வரும். ராகு 9ல்
இருப்பதால் எதிர்பாராத தன லாபத்திற்கு வாய்ப்புள்ளது. பங்கு வர்த்தகத்தில்
அதிர்ஷ்டம் அடிக்கும். வெளியூர்களில் புதிய கிளைகள் தொடங்கும் யோகம் உள்ளது.
வங்கியில் இருந்து பிப்ரவரி மாதத்திற்குள் எதிர்பார்த்த கடன் கைக்கு வரும்.
விவசாயம் சீராக இருக்கும். மரம் வெட்டும் காண்ட்ராக்ட்டில் நல்ல லாபம்
பார்க்கலாம். குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பில் நல்ல வருமானம் வரும்.
அடமானத்தில் இருக்கும் நிலப்பத்திரத்தை மீட்பீர்கள். பூச் செடிகள், மரக்கன்றுகள், மூலிகை
நாற்றுக்கள் போன்ற நர்சரி தொழில் லாபகரமாக நடக்கும். கிழங்கு வகை, எண்ணெய்
வித்துக்கள் மூலம் நல்ல லாபம் வரும். புதிய டிராக்டர், பம்ப்செட், லாரி
வாங்குவீர்கள். குத்தகை பாக்கிகள் குறித்த நேரத்தில் வசூலாகும்.
பரிகாரம்:
வாராகி அம்மனுக்கு
வெண்தாமரை மலர் சாத்தி வணங்கலாம். திருவண்ணாமலை ரமணாஸ்ரமம், சேஷாத்திரி
சுவாமிகள் ஆஸ்ரமம், யோகிராம்
சுரத்குமார் ஆகியோர் ஆசிரமத்திற்கு சென்று தியானிக்கலாம். பாரம் சுமப்போர், கட்டிட
தொழிலாளர்கள், துப்புரவுத்
தொழிலாளர்களுக்கு உதவலாம்.
Tags : Tamil new year , Tamil puthandu , kanni , kanni rasi ,