சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த துலா ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள்,
பார்வை,
சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்பொழுது கலவையான
பலன்கள் இருக்கும். எதிலும் நிதானம்,
கவனம் தேவை. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது
இருப்பதால் குடும்பத்தில் நிச்சய மற்ற நிலை இருக்கும். வயதான பெற்றோர்கள் மூலம்
மருத்துவ செலவுகள், மன
உளைச்சல், அலைச்சல்
இருக்கும். ராகு எட்டில் இருப்பதால் படபடப்பு,
மறதி,
கவனக் குறைவு இருக்கும்.
வாகனம் ஓட்டும்
போதும் பின்னால் அமர்ந்து செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
காரணம் கேது அமைப்பு காரணமாக சட்டச் சிக்கல்,
கோர்ட் எனப் பிரச்னைகள் வரலாம். மகனுக்கு வேலை
கிடைக்கவில்லையே என்ற கவலை நீங்கும். பிரபலமான நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்கும். அரசியல், அரசு
அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம்,
ஆதரவு கிடைக்கும். அதன் காரணமாக இழுபறியாக
இருக்கும் விஷயங்கள் சாதகமாக முடியும்.
அரசாங்கத்தில்
இருந்து வரவேண்டிய உரிமை கடிதங்கள்,
பட்டா,
லைசென்ஸ்,
சான்றிதழ்கள் கைக்கு வரும். விரய ஸ்தான அமைப்பு
காரணமாக அவசிய, அநாவசிய
செலவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் யோகம்
உள்ளது. வெளியூர் பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது முக்கியம். உடைமைகள், செல்போன், லேப்டாப், கைப்பை
போன்றவற்றை பாதுகாப்பாக வைப்பது அவசியமாகும்.
பெண்கள்:
குடும்ப ஸ்தானத்தில்
கேது இருப்பதால் எதையாவது நினைத்து குழப்பம் அடைவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே
கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குருவின் பார்வை காரணமாக குழந்தை பாக்கியம்
எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. குரு, சூரியன்
சம்பந்தம் காரணமாக பதவி உயர்வுக்கு பாக்கிய முள்ளது. அக்கா - தங்கைகளிடையே சில
பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. மகள் வழியில் பிரசவச் செலவுகள், மருத்துவச்
செலவுகள் உண்டாகும். சனி ஆட்சி பலத்துடன் இருப்பதால் தாய்வீட்டில் இருந்து வர
வேண்டிய பாகப் பிரிவினை சொத்து கைக்கு வரும். கன்னிப் பெண்களின் கல்யாணக் கனவுகள்
நனவாகும். வரும் வைகாசி மாதத்திற்குள் திருமண பிராப்தம் கூடிவரும்.
உத்யோஸ்தர்கள்:
சாதகமான மாற்றங்கள்
வரும். சனி ஆட்சி பெற்று இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய
வேலையில் சேர முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளி நாட்டில் வேலை
செய்பவர்களுக்கு பல காரணங்களுக்காக சொந்த ஊர் திரும்ப வேண்டிய சூழ்நிலைகள்
ஏற்படும். கேது 2ல்
இருப்பதால் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். தொழிற்சங்க விஷயங்களில் பட்டும்
படாமல் நடந்து கொள்வது உத்தமம். ஆசிரியர்களுக்கு விருதுகள், பாராட்டுக்கள்
கிடைக்கும். வக்கீல் தொழில் செய்பவர்களுக்கு அரசாங்க வழக்கறிஞராக நியமனம்
செய்யப்படுவார்கள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள்
கிடைக்கும். லோன் தொகை பிப்ரவரி மாதம் கைக்கு வரும்.
அரசியல் -
கலைத்துறை:
குரு, சனி அமைப்பு
காரணமாக செல்வாக்கு உயரும். உங்கள் எண்ணங்கள்,
திட்டங்கள் எல்லாம் கூடிவரும். மாநில அளவில்
மிகப்பெரிய பதவியில் அமரும் யோகம் உள்ளது. கோஷ்டிப் பிரச்னைகள் இருந்தாலும்
மேல்மட்டத்தில் உங்கள் கை ஓங்கும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள்
கிடைக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான நிலை இருக்கும். பழைய சம்பள பாக்கிகள்
கைக்கு வரும். விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
இசைத்துறையினருக்கு பாராட்டு. விருது கிடைக்கும். சின்னத் திரையில் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்து புகழ் அடைவீர்கள். பட விநியோகஸ்தர்களுக்கு தேக்க நிலை நீங்கி
நல்ல மாற்றங்கள் வரும். பாதியில் நின்ற படப்பிடிப்புக்கள் மீண்டும் தொடங்கும்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்:
வியாபாரம் லாபகரமாக
நடக்கும். காண்ட்ராக்ட், கமிஷன், புரோக்கர்
வகையில் நல்ல ஆதாயம் வரும். தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், அழுகும்
பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய்
வியாபாரம் கை கொடுக்கும். குளிர்பான வகைகள்,
பேக்கரி,
ஹோட்டல் தொழிலில் முன்னேற்றம் உண்டு. கட்டிட
சம்பந்தமான, மின்சார
சம்பந்தமான தொழில்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை
பெருக்குவீர்கள். வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய
கடனை அடைப்பீர்கள். ஏலச்சீட்டு, குலுக்கல்
சீட்டு, பண்டு, பைனான்ஸ்
போன்றவற்றில் ஏற்ற இறக்கம் இருக்கும். சூழ்நிலை அறிந்து நடப்பது நல்லது. விவசாயம்
கை கொடுக்கும். வாழை சாகுபடியில் நல்ல லாபம் வரும். கீரை, காய்கறிகள், கிழங்கு
வகைகளில் நல்ல லாபம் பார்க்கலாம். காண்ட்ராக்ட், குத்தகை பாக்கிகள் வசூலாகும்.
தோட்டம், தோப்பு வாங்க
இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வளமான பூமி அமையும். கரும்பு, இஞ்சி, மஞ்சள்
விவசாயம் கை கொடுக்கும்.
பரிகாரம்:
புதன்கிழமை
நரசிம்மருக்கு துளசி மாலை சாத்தி வழிபடலாம். ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர், மங்களநாயகியை
தரிசிக்கலாம். ஏழை கர்ப்பிணிப் பெண்களின் தேவை அறிந்து உதவலாம்.
Tags : Tamil new year , Tamil puthandu , thulam , tula , tulam , thulam rasi