குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - கன்னி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார்.

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். முகத்தில் புதுவிதமான புத்துணர்ச்சி ஏற்படும்.

குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் சகோதரர் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். 

திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். 

வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

குரு நின்ற பலன்:

குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். 

பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நன்மதிப்பை உண்டாக்கும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வமும், தேடலும் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மதிப்பை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

ஆதரவாக இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலையும் பலமுறை சிந்தித்து மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். 

வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

மாணவர்கள்:

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மேற்படிப்புகளுக்கு தேவையான வழிகாட்டிகள் அமைவார்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு திறமையும், பாராட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மையும், புரிதலின்மையும் விலகும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்கவும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிமாற்றத்தால் குழப்பங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாபாரிகள்:

வேலையாட்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகளின் மூலம் வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவும். 

முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு சார்ந்த உதவிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். 

அவ்வப்போது உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இசை தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள்.

நன்மைகள்:

குரு பெயர்ச்சியானது மனதில் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும், புதிய இலக்குகளை அடைவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கக் கூடிய நல்ல பொற்காலமாக அமையும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வழிபாடு:

திருச்சிக்கு அருகில் உள்ள பூலோக நாதருக்கு அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வீடு மனை அமைவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top