பிறந்த மாதமும் அதற்கான பொது பலன்களும்

0
பிறந்த மாதமும் அதற்கான பொது பலன்களும்

ஜாதகத்தில் ஒருவர் பிறந்த தேதி மற்றும் நட்சத்திரங்களை வைத்து ஜாதகரின் குணநலன்கள் கணிக்கப்படுகிறது. அதேபோல் அவரவர் பிறந்த மாதங்களை வைத்தும் ஒருவரை பற்றி கூற முடியும்.

ஜனவரி, அக்டோபர் :

ஜனவரி, அக்டோபர் மாதங்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 1. இவர்களுக்கு வியாபாரம் சரியாக அமையாது. இவர்கள் ஏதேனும் ஒரு துறையில் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ துறையிலும் அதிக பலன் கிடைக்காது. இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றும் திறன் கொண்டவர்கள்.

பிப்ரவரி, நவம்பர் :

பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 2. இவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லையென்றாலும் கற்பனை வளம் அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகும். சிலர் வாழ்வில் பிடிப்பில்லாமல் செயல்படுவர். 

மார்ச், டிசம்பர் :

இந்த மாதங்களில் பிறந்தவர்களின் மாத அதிர்ஷ்ட எண் 3. இவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். இவர்களுக்கு நிர்வாகம், மருத்துவம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தடைபடும். இவர்கள் யாருக்கும் பணிந்து செயல்படமாட்டார்கள். தேவையில்லா பிரச்சனைகளுக்கு அதிகம் வருந்தக்கூடியவர்களாக இருப்பார்கள். 

ஏப்ரல் :

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 4. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். இவர்கள் சொந்த தொழில் செய்தால் அதிக லாபம் ரூடவ்ட்டலாம். மிகவும் நம்பிக்கையாளர்கள். இவர்கள் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள். சிலர் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள தவிப்பார்கள்.

மே :

மே மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 5. இவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். இவர்கள் அரசியல், நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீதிபதியாகவும் பணியாற்றுவார்கள். இவர்கள் தனிமையை மிகவும் விரும்புபவர்கள்.

ஜூன் :

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 6. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். இவர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, மார்க்கெட்டிங் துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். எதிலும் ஆசானாக திகழ்வர். இவர்கள் பண சேமிப்பு இல்லாதவர்கள். இவர்கள் உல்லாச வாழ்வை நாடுபவர்கள். 

ஜூலை :

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 7. இவர்களுக்கு கல்வி மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள். சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். சிலர் வாழ்வில் பிடிப்பில்லாமல் வாழ்வர். அவசரம், வெறுப்பு, ஆத்திரம் உடையவர்கள். இவர்களை கண்டு பிறர் பயப்படுவார்கள். 

ஆகஸ்டு :

ஆகஸ்டு மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 8. இவர்களுக்கு கல்வி சுமாராகத்தான் அமையும். நண்பர்கள் குறைவாக கொண்டவர்கள். இவர்கள் மிகவும் தனிமை பிரியர்கள். எதையும் தாமதமாகவே செய்வார்கள். கலக மனப்பான்மையாளர்கள்.

செப்டம்பர் :

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 9. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாகத்துறை, நீதித்துறை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள். சரித்திரம் படைப்பவர்கள். அரிய பல காரியங்கள் செய்வார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top