ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - மேஷம்

0
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - மேஷம்

மேஷம் கிரகநிலை - ராகு பகவான் ராசி ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார் | கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த ராகு கேது பெயர்ச்சி பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். 

வீண் பழி அகலும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். 

பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். 

கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்.

அசுபதி

இந்த பெயர்ச்சியில் செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. 

முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். 

பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும்.

பரணி

இந்த பெயர்ச்சியில் மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். 

கடன் பிரச்சினை தீரும். இதுவரை இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். 

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை

இந்த பெயர்ச்சியில் இதுவரை இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். 

உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

பரிகாரம்

செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top