சனியின் ஆதிக்கத்தில் பிறந்த மகரராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள்,
பார்வை,
சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும் பொழுது, உங்கள்
ராசிநாதன் சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். அதன் காரணமாக
ஜென்ம சனி என்ற அமைப்பு உண்டாகிறது. சனியுடன் குருவும் சேர்ந்து இருப்பதால்
சாதகமான மாற்றங்கள் வரும். விரயச் சனி காலத்தில் தடைபட்டு நின்ற விஷயங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாக கூடிவரும். எந்த விஷயத்திலும் அவசரம் அகலக்கால் வேண்டாம்.
குருவின் பார்வை
காரணமாக சொத்து விஷயங்கள், பணவிஷயங்கள்
சாதகமாக முடியும். சகோதர உறவுகளிடையே இணக்கமான சூழ்நிலைகள் இருக்கும்.
பாக்கியஸ்தான பலம் காரணமாக வீடு கட்டுவதற்கான வாஸ்து, பூமி பூஜை
போடுவீர்கள். ஆவணி மாதத்திற்குள் புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்து
குடிபோவீர்கள். பிள்ளைகள், பேரன்
பேத்திகள் எதிர்காலம் கருதி புறநகர் பகுதியில் நிலம், பிளாட்
வாங்கிப் போடுவீர்கள். குடும்ப விஷயங்களை மிகவும் ரகசியமாக வைப்பது நலம் தரும்.
சொந்த பந்தங்களிடையே
பணம் கொடுக்கல், வாங்கல், வட்டி வரவு
செலவு, நகை இரவல்
கொடுப்பது, வாங்குவது
போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. சர்க்கரை, BP போன்ற
பரிசோதனைகளை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம். சிறுநீரகக் கல், தொற்று
உபாதைகள் வரவாய்ப்புள்ளது. ஒற்றைத் தலைவலி,
நரம்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் பார்த்து
வருவது நல்லது.
பெண்கள்:
நிறைகுறைகள் உள்ள
நேரம். குருவின் பார்வை காரணமாக பல முக்கிய மாற்றங்கள் வரும். அடிப்படை வசதிகள்
பெருகும். தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகப்பிரிவினை சொத்து, பணம் ஆகஸ்ட்
மாதத்திற்குள் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம்
இருக்கும். கணவர் வகையில் வரவேண்டிய சொத்து,
பண விஷயங்கள் சுமுகமாக முடியும். மகளுக்கு நல்ல
நிறுவனத்தில் வேலை
அமையும். அதனால் மகிழ்ச்சியும், மன
நிறைவும் அடைவீர்கள். தோழிகளுடன் அதிக நெருக்கம் வேண்டாம். சொத்துக்களை மாற்றி
அமைப்பீர்கள். கர்ப்பமாக இருக்கும் மருமகளுக்குச் சுகப் பிரசவம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள்:
ஜென்ம சனியாக
இருந்தாலும் ராசிநாதன் ராசியில் இருப்பதால் படிப்படியாக நல்ல மாற்றங்கள் வரும்.
விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய வேலையில் சேருவதற்கான காலநேரம் வந்துள்ளது.
உங்கள் வேலைகளை பொறுப்புடன் செய்து முடிப்பது அவசியம். சக ஊழியர்களிடம் உங்கள்
வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். மூத்த அதிகாரிகளுடன் இணக்கமாக போவது உத்தமம். தொழிற்
சங்கத்தில் பதவி கிடைக்கும். கம்ப்யூட்டர் துறையினருக்கு வெளிநாட்டில் வேலை
கிடைக்கும். விருப்ப ஓய்வு பெறலாமா என்ற சிந்தனைகள் மனதில் தோன்றும். எதையும்
ஆலோசித்து முடிவு எடுக்கவும். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும்
செய்தி உண்டு.
அரசியல்-
கலைத்துறை:
அரசியலில் ஜென்மச்
சனியால் பதவிக்கு வந்தவர்கள் அதிகம். அதிலும் உங்கள் ராசிநாதன் சனி உங்களுக்கு
நல்ல சந்தர்ப்பங்களை தருவார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள்
கிடைக்கும். எல்லோரையும் அனுசரித்துப் போவது நலம் தரும். M.L.A., M.P.,க்களின்
ஆதரவு கிடைக்கும். அரசாங்கம் அமைக்கும் கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதனால்
மாவட்ட அளவில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினருக்கு சீரான முன்னேற்றம்
இருக்கும். வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைக்கும். இசைக்
குழுவினர்களுக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்புக்கள்
கிடைக்கும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்துவதற்கான
வாய்ப்புக்கள் தேடிவரும்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்:
வியாபாரம் சாதகமாக
நடக்கும். புதிய ஏஜென்சி, டீலர்ஷிப், ஸ்டாக்கிஸ்ட்
எடுத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வட்டிக்கு
வாங்கி முதலீடு செய்யும்போது கணக்கு போட்டு இறங்குவது அவசியம். இரும்பு, எவர்சில்வர், பித்தளை
பாத்திரம், வெள்ளி, தங்கம்
வியாபாரம் லாபகரமாக நடக்கும். ரியல் எஸ்டேட்,
கமிஷன்,
புரோக்கர் வகையில் ஆதாயம் வரும். வியாபார சம்பந்தமான
கொள்முதல் பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்பி
எந்த விஷயத்திலும் இறங்க வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஏப்ரல்
மாதத்திற்கு மேல் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். விவசாயம் சாதகமாக இருக்கும், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, வாழை இலை
வகையில் நல்ல விலை கிடைக்கும். காப்பி,
ஏலக்காய்,
மிளகு விவசாயம் நல்ல பலனைத் தரும். காய்கறிகள், கீரை வகைகளால்
நல்ல லாபம் வரும். குத்தகை பாக்கிகள் வசூலாகும். புதிய கிணறு பம்ப்செட்
அமைப்பதற்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
பரிகாரம்:
சனிக் கிழமை நவகிரக
வழிபாடு செய்து 9 நெய்
தீபங்கள் ஏற்றி வழிபடலாம். அமாவாசை அன்று வீரபத்திர சுவாமியை தரிசிக்கலாம்.
சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை
வாங்கித் தரலாம்.
Tags : Tamil new year , Tamil puthandu , magaram , maheram , makara rasi , makaram