குரு ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள் பார்வை சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்
பொழுது நிறை குறைகள், பிரச்னைகள், தீர்வுகள்
எனக் கலவையான பலன்கள் இருக்கும். தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று ராசிநாதன் குருவுடன்
சேர்ந்து சஞ்சரிப்
பதால் சில முக்கிய
மாற்றங்கள் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் எல்லாம் அரசாங்க சட்டதிட்டத்தின்படி
சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்கவும். ஏனென்றால் ஏழரைச் சனி நடப்பதால்
சில வில்லங்கங்கள் வரலாம்.
குரு, சந்திரன்
தொடர்பு காரணமாக பிற்கால வாழ்க்கைக்கான அடித்தளம் அமையும். பொருளாதாரத்தில் நல்ல
மாற்றங்கள் வரும். பகுதிநேர வேலை, தொழில்
மூலம் உபரி வருமானம் வரும். கண்பார்வை சம்பந்தமாக, கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்ய
வேண்டி இருக்கும். எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருந்த பெரிய தொகை கைக்கு வரும். அதன் காரணமாக கொடுக்க வேண்டிய கடன்
பாக்கிகளை பைசல் செய்வீர்கள்.
தற்போது வசிக்கும்
ஊரில் இருந்து சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்று தங்குவதற்கான முடிவுகளை
எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருக்கும் மகளின் அழைப்பை ஏற்று அங்கு சென்று சில
மாதங்கள் தங்கி வருவீர்கள். வீட்டில் வயதான பெற்றோர்கள் மூலம் மருத்துவ செலவுகள், அலைச்சல், மன உளைச்சல்
வந்து நீங்கும்.
பெண்கள்:
குரு, சனி இரண்டாம்
வீட்டில் இருப்பதால் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். மகளுக்கு குழந்தை பாக்கியம்
இல்லையே என்று கவலைப் பட்டீர்களே, இனி
அந்த கவலை நீங்கும். குரு பார்வையால் மகளுக்கு ஆரோக்கியமான வாரிசு உருவாகும்.
ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் சிறிய, பெரிய
செலவுகள் உண்டாகும். ஆகையால் எதிலும் அகலகால் வைக்காமல் இருப்பது நலம் தரும்.
கணவருக்கு அலுவலகத்தில் இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். அதனால்
குடும்பத்தை பிரிய வேண்டியது இருக்கும். தோழிகளுடன் குடும்ப விஷயங்களை பேசி ஆறுதல்
தேடுவதை தவிர்ப்பது நல்லது. பணம், நகை
கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள்:
குரு, சனி அமைப்பு
காரணமாக உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு
என்று இருப்பது உத்தமம். அலுவலக சம்பந்தமான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதனால்
நிலுவைத் தொகை மொத்தமாக கைக்கு வரும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு
பதவி உயர்வு, தனிப்
பொறுப்பு, வாகன சலுகைகள்
கிடைக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கு மேல் இடமாற்றம் வரலாம்.
சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். வேலை சம்பந்தமாக தேர்வு
எழுதியவர்களுக்கு வெற்றிச் செய்தி கிடைக்கும். வெளிமாநிலத்தில் வேலை
தேடியவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
அரசியல்-
கலைத்துறை :
சனி ஆட்சி, குரு பார்வை
காரணமாக சாதகமான காற்று வீசும். கட்சி மேல் மட்டத்தில் செல்வாக்கு கூடும். M.P, MLA.க்களின்
ஆதரவு கிடைக்கும். நலத்திட்ட உதவிகள் வழங்கி தொகுதி மக்களின் செல்வாக்கை
பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தோல்வி அடைவார்கள். மாவட்ட அளவில்
உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். பட்டிமன்ற
பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களுக்கு
நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். தவில்,
நாதஸ்வர வித்வான்களுக்கு பாராட்டு, பட்டம், விருது
கிடைக்கும். சின்னத்திரையில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம்
செய்யப்படுவீர்கள். பாதியில் நின்ற படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்:
உங்கள் எண்ணங்கள், திட்டங்கள்
எல்லாம் நல்லபடியாகக் கூடி வரும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. வசதி
படைத்த உறவினரிடம் இருந்து மிகக் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். அதை வைத்து
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஸ்டேஷனரி,
பத்திரிகை,
பிரிண்டிங்,
DTP பதிப்பகம் போன்ற வற்றில் நல்ல லாபம்
வரும். வெளிமாநில, மாவட்ட
பொருட்கள் வாங்கி விற்பனையில் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கார்ப்பென்டர், மின்சார
காண்ட்ராக்ட், பெயிண்டிங்
காண்ட்ராக்ட், உள்அலங்கார
வேலை போன்றவற்றில் நல்ல காசு பார்க்கலாம். அரசாங்க டெண்டர், காண்ட்ராக்ட்கள்
கிடைக்கும். அதனால் கையில் பணம் புரளும். விவசாயம் சாதகமாக இருக்கும். கரும்பு, நெல், வாழை, மஞ்சள்
விவசாயம் கை கொடுக்கும். எதிர்பார்த்த குத்தகை பணம் வசூலாகும். அடமானத்தில்
இருக்கும் நிலப்பத்திரத்தை மீட்பீர்கள். மரம் வெட்டும் காண்ட்ராக்ட்டில் லாபம்
குவியும். சூரியகாந்தி, எள், வேர்க்கடலை
போன்றவற்றில் நல்ல விளைச்சலும், லாபமும்
வரும். புதிய பம்ப்செட், டிராக்டர்
வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கால்நடைகள், கோழிப்பண்ணை
மூலம் லாபம் வரும்.
பரிகாரம்:
பிரதோஷத்தன்று
சிவனுக்கு வில்வமாலையும், நந்திக்கு
அறுகம்புல் மாலையும் சாத்தி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்மன் அம்பாள் கோயிலில்
அன்னதானம் செய்யலாம். உடல்நலம், மனநலம்
குன்றிய குழந்தைகள் காப்பகத்திற்கு உதவலாம்.
Tags : Tamil new year , Tamil puthandu , dhanusu , dhanusu rasi , Dhanusu Raasi