செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள்,
பார்வை,
சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும் பொழுது, படிப்படியாக
நல்ல விஷயங்கள் கூடிவரும். தாமதம்,
தடைகள் நீங்கும். நல்ல யோக பாக்கியங்கள் அமையும்.
வசதி வாய்ப்புக்கள் கூடும். சனி மூன்றாம் வீட்டில் ஆட்சிப் பலம் பெற்று குருவுடன்
சேர்ந்து இருப்பதால் பொருளாதார பிரச்னைகள்,
கடன்கள் தீருவதற்கு நல்லவழி பிறக்கும். மாசி
மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிப்பீர்கள். கேது
உங்களுக்கு ஆன்மிக தாகத்தை உண்டாக்குவார்.
சொந்த பந்தங்களுடன்
ஒரு குழுவாக பல மாநிலங்களில் உள்ள பிரசித்திபெற்ற தலங்களுக்கு சென்று
தரிசனம் செய்வீர்கள். நடுத்தர வயது உடையவர்களுக்கு வாழ்க்கையில் பிற்கால
யோகத்திற்கான அடித்தளம் அமையும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்கள்
எதிர்பார்த்த குடியுரிமை சான்றிதழ் கைக்கு வரும். மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும்
செய்தி வரும். அதனால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். ராகு 7ல் இருப்பதால்
நிறை குறைகள் உண்டு. வெளிநாட்டில் இருக்கும் மகளின் அழைப்பை ஏற்று அங்குச் சென்று
மாதக் கணக்கில் தங்குவீர்கள். இரவு நேர வண்டி பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நலம்
தரும்.
பெண்கள்:
சனி, குரு ஆட்சிப்
பலம் பெறுவதால் படிப்படியாக பிரச்னைகள் தீரும். மருத்துவமனையில் சிகிச்சை
பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். மாணவிகள் மேல் படிப்பிற்காக
வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. கன்னிப் பெண்களுக்கு கல்யாண யோகம் கூடி
வந்துள்ளது. வைகாசி மாதத்திற்குள் உங்கள் விருப்பப்படி நல்ல இடத்தில் இருந்து
மணமகன் அமைவார். தாய்வீட்டில் இருந்து வந்த மனக்கசப்புக்கள் மறையும். அரசாங்க
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு,
சலுகைகள் கிடைக்கும். விரய ஸ்தான அமைப்பு காரணமாக
நிச்சயதார்த்தம், வளைகாப்பு, 60ஆம் கல்யாணம்
என்று சுப விசேஷங்கள் தொடரும். உடல் நலத்தில் கவனம் தேவை. மூட்டுவலி, தைராய்டு, சைனஸ், வயிறு, மாதவிடாய்
கோளாறுகள் வரலாம்.
உத்யோகஸ்தர்கள்:
சாதகமான மாற்றங்கள்
உண்டாகும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு
மாற்றல் பெற்று வருவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு புதிய
பொறுப்புக்கள் கிடைக்கும். முதலாளியுடன் நேரடித் தொடர்பு உண்டாகும். அலுவலக, தொழிற்சங்க
வழக்குகளில்
சமாதானமான தீர்வு வரும். வங்கி ஊழியர்கள்,
ஆசிரியர்கள்,
போலீஸ் துறையினருக்கு நல்ல மாற்றங்கள் வரும்.
விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த லோன் தொகை மார்ச் மாதத்திற்குள்
கிடைக்கும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் காண்ட்ராக்ட்
அடிப்படையில் வேலை கிடைக்கும். ஆசிரியர்களுக்கு விருதுகள், பாராட்டுக்கள்
கிடைக்கும்.
அரசியல்-கலைத்துறை:
அரசியல் வாதிகளுக்கு
சாதகமான காற்று வீசும். உங்கள் உழைப்பிற்கும்,
திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தொகுதியில் செல்வாக்கு கூடும். தலைமைக்கு நெருக்கமாகும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
அதனால் மாவட்ட அளவில் முக்கிய பதவியில் அமருவீர்கள். தேர்தலில் போட்டியிடு வதற்கான
வாய்ப்புகள் கிடைக்கும். ராகு 7ல்
இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அணுகுவது நல்லது. இல்லையென்றால் சட்டச்
சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். இசை,
டைரக்ஷன் துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு, விருதுகள்
கிடைக்கும். அரசியல், தொழில்
அதிபர்கள் தொடர்பு காரணமாக சொந்தமாக படம் தயாரித்து வெளியிடுவீர்கள். சின்னத்திரை
கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் தேடிவரும்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்:
தொழில் லாபகரமாக
நடக்கும். சனி மாற்றம் காரணமாக தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்குவீர்கள். வெளிமாநில, வெளிமாவட்ட
பொருட்கள் வாங்கி விற்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வியாபாரிகள் சங்கத்தில்
தலைமைப் பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். 7ல்
ராகு இருப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பிரிய நேரலாம். பணம் கொடுக்கல்
வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன், மத்தியஸ்தம், பஞ்சாயத்து
போன்றவற்றில் முன்னிற்க வேண்டாம். அரசாங்க காண்ட்ராக்ட்கள், சப்
காண்ட்ராக்ட்கள் கிடைக்கும். ஹோட்டல்,பேக்கரி, ஸ்வீட்ஸ்டால், நெருப்பு
சம்பந்தமான தொழில்கள் லாபகரமாக நடக்கும். விவசாயம் சீராக இருக்கும். மிளகு, காப்பி, தேயிலை, ஏலக்காய்
வகையில் நல்ல லாபம் வரும். ஊடுபயிர் விவசாயம் செய்பவர்கள் கூடுதல் லாபம்
பார்ப்பார்கள். வாழை, கரும்பு, மஞ்சள்
விவசாயம் கைகொடுக்கும். புதிய தோட்டம் வாங்கும் பாக்கியம் உள்ளது. டிராக்டர், லாரி, போன்ற
வாகனங்கள் வாங்குவீர்கள். மரம் வெட்டி விற்கும் காண்ட்ராக்ட்டில் நல்ல லாபம் வரும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனுக்கு
குங்கும அர்ச்சனை
செய்து வழிபடலாம். திருச்செந்தூர் முருகப் பெருமாளை தரிசிக்கலாம். ஏழை
நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்க உதவலாம்.
Tags : Tamil new year , Tamil puthandu , virichigam , Vrishchika , Vrschika , viruchigam , veruchigam rasi