ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்

0
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்

மீனம் கிரகநிலை - ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்துக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த ராகு கேது பெயர்ச்சியில் காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். 

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 

உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். 

திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியல் துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

பூரட்டாதி

இந்த பெயர்ச்சியில் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அறிவு திறமை அதிகரிக்கும். 

கல்வியில் வெற்றி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரட்டாதி

இந்த பெயர்ச்சியால் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. உங்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும். 

வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

ரேவதி

இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். 

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

(2023 அக்.8-ம் தேதி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் மாறி 2025 ஏப்.26-ம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதாவது, மீனத்துக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்துக்கு மாறுகிறார்.)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top