குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - மகரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை சுக ஸ்தானமான நான்காம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார்.

புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான ராசி ஸ்தானத்தையும் பார்க்கிறார். 

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். 

ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான தருணங்கள் உண்டாகும்.

குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செய்து வெற்றி அடைவீர்கள். செயல்பாடுகளில் அனுபவமும், புத்திக்கூர்மையும் வெளிப்படும்.

குரு ஒன்பதாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். 

மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து தெளிவு பிறக்கும். சிறு சிறு விஷயங்களிலும் மன நிறைவு ஏற்படும்.

குரு நின்ற பலன்:

குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பதற்கான தருணங்கள் உண்டாகும். 

காப்பீட்டுத் துறைகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகளும், சம்பவங்களும் நடைபெறும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

திறமைக்குண்டான மதிப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான எண்ணங்களும், அதற்கான சூழல்களும் உண்டாகும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரமான விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். முதுநிலை கல்வியில் எதிர்பார்த்த தருணங்கள் அமையும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணி நிமிர்ந்தமான சில விஷயங்களில் ரகசியம் காப்பது நல்லது. திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். மற்றவர்கள் செய்யும் செயல்களால் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த சில விஷயங்களுக்கு பொறுமையை கையாளுவது நல்ல முடிவினை அளிக்கும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். திறமைக்குண்டான மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியும், புதிய விஷயங்கள் சார்ந்த தேடல்களும் அதிகரிக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதுமையான சில விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது தேவையற்ற விரயத்தை தவிர்க்கும்.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமைதோறும் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், சுபிட்சமும் ஏற்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top