ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - விருச்சிகம்

0
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - விருச்சிகம்

விருச்சிகம் கிரகநிலை - ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்துக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த ராகு கேது பெயர்ச்சியால் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஏதாவது சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை.

வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். 

சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். 

ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. உடல்நலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

விசாகம் - 4: 

இந்த பெயர்ச்சியில் வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

அனுஷம்

இந்த பெயர்ச்சியால் அநாவசிய செலவுகளை நீக்கி அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.

கேட்டை

இந்த பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். 

கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்

துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

(2023 அக்.8-ம் தேதி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் மாறி 2025 ஏப்.26-ம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதாவது, விருச்சிகத்துக்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்துக்கு மாறுகிறார்;கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்துக்கு மாறுகிறார்.)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top